ஏமாந்த கூட்டு எதிர்க்கட்சி; இரு பக்கமும் விளையாடிய SLFP அமைச்சர்! - sonakar.com

Post Top Ad

Sunday 22 April 2018

ஏமாந்த கூட்டு எதிர்க்கட்சி; இரு பக்கமும் விளையாடிய SLFP அமைச்சர்!



கூட்டு எதிர்க்கட்சியினரால் பெரும் நம்பிக்கையுடன் கொண்டு வரப்பட்டு தோல்வியில் முடிந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டிலேயே முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நபரும் சு.க ஆதரவு தொழிலதிபரும் இணைந்து மஹிந்த அணிக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பின்னணியிலேயே இப்பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் குறித்த அமைச்சர் வாக்களிப்பில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்டுள்ளதுடன் ஏனைய சில உறுப்பினர்களையும் தடுத்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தரப்பு தெரிவிக்கிறது.


இதேவேளை, ஆகக்குறைந்தது 5 அமைச்சர்களின் கையொப்பமில்லாமல் குறித்த பிரேரணையைக் கையளிக்க வேண்டாம் என மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தி வந்ததோடு நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவருவது சுதந்திரக் கட்சியாகவும் அதற்கு கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு அளிப்பதாகவுமே இருக்க வேண்டும் என தெரிவித்து வந்த போதிலும் கட்சி உறுப்பினர்கள் நிர்ப்பந்தத்தில் தமது கையொப்பமில்லாமல் ஒப்படைக்க இணங்கியதாகவும் குறித்த தகவல் தெரிவிக்கிறது.

எனினும், கூட்டு எதிர்க்கட்சிக்கு நம்பிக்கையளித்து வந்த குறித்த அமைச்சர் இறுதி நேரத்தில் கைவிட்ட காரணத்தினாலேயே சு.க உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தைகளும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment