வடகொரியாவுடன் மலர்ந்திருக்கும் 'உறவு' : ட்ரம்ப் திருப்தி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 18 April 2018

வடகொரியாவுடன் மலர்ந்திருக்கும் 'உறவு' : ட்ரம்ப் திருப்தி!


வடகொரியாவைத் தாக்கியழிக்கப் போவதாக கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வந்த அமெரிக்கா தற்போது அந்நாட்டுடனான உறவுகளை வளர்த்துக் கொள்வதில் தீவிர அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது.


இரு நாட்டு அதிபர்களையும் சந்திக்க வைப்பதன் அடிப்படையிலான நகர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில் வடகொரியாவுடன் மலர்ந்திருக்கும் உறவு குறித்து பகிரங்கமாக தனது மகிழ்ச்சியை வெளியிட்டு வருகிறார் ட்ரம்ப்.

அமெரிக்காவின் எப்பகுதியையும் தாக்கக் கூடிய அணு ஆயுத வல்லமையை வட கொரியா பெற்றுள்ள நிலையில் இரு தரப்பு உறவு மலர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment