ரவி விவகாரம்; ஜோசப் மைக்கேல் பெரேரா இராஜினாமா - sonakar.com

Post Top Ad

Thursday, 26 April 2018

ரவி விவகாரம்; ஜோசப் மைக்கேல் பெரேரா இராஜினாமா


ரவி கருணாநாயக்க உதவித் தலைவர் பதவியில் நீடிக்க அனுமதியளிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிலிருந்து தான் விலகிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார் ஜோசப் மைக்கேல் பெரேரா.


கடந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் தனது தொகுதியில் கட்சியை வெற்றி பெற வைத்து தனது ஆதரவாளர் பட்டாளத்தையும் பெருக்கிக் கொண்டுள்ள ரவி கருணாநாயக்க புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவியொன்றையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

இந்நிலையிலேயே ஜோசப் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment