இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம்: இம்ரான் - sonakar.com

Post Top Ad

Thursday 26 April 2018

இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம்: இம்ரான்



திருகோணமலை சண்முகா  இந்து மகளிர்க் கல்லூரியில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள் மிகுந்த மன வேதனை அளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். தற்போது இந்த கல்லூரியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை சம்மந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

பாடசாலைக்குள் பாடசாலை அதிபரின் அனுமதி இன்றி நுழைந்து பாடசாலை நிர்வாக நடவடிக்கைகளுக்கு யார் குழப்பம் விளைவித்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. பாடசாலையில் அக்கறைகொண்ட பெற்றோர் என்ற ரீதியில் இந்த நடவடிக்கையை கண்டித்து கவனஈர்ப்பு போராட்டம் நடாத்துவதிலும் தவறில்லை.



ஆனாலும் சண்முகா இந்து கல்லலூரியில் இன்று நடைபெற்ற கவனஈர்ப்பு போராட்டம் அதன் நோக்கங்களை தாண்டி இனவாதத்தை தூண்டுவதாகவே அமைந்தது வருத்தமளிக்கிறது.

அந்த பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்கள் அணியும் ஆடை விடயத்தில் ஏதாவது பிரட்சனை காணப்படின் அதை கல்வித்திணைக்கள அதிகாரிகளுடன் பேசி சுமூக தீர்வொன்றை கண்டிருக்கலா.ம் ஆனால் இந்த பிரட்சனையை இந்த அளவு பூதாகரமாக்கிய பாடசாலை நிர்வாகம் இசம்மந்தப்பட ஆரியர்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

ஆடை அணியும் சுதந்திரம் தனிமனித உரிமை சார்ந்தது. முஸ்லிம் பாடசாலைகளில் பல தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதுவரை அந்த ஆசரியர்களை முஸ்லிம் கலாசார ஆடைகளை அணியுமாறு பாடசாலை நிர்வாகம் கூறியதாக நான் அறியவில்லை. அத்துடன் தமிழ் பாடசாலைகளில் தமிழ் கலாசார ஆடைகள் அணிய வேண்டுமாயின் ஆசிரியர்கள் காட்சட்டை அணியாமல் வேட்டி சட்டை அணித்துவருமாறும் யாரும் கூறியதில்லை.

நடைபெற்ற கவனஈர்ப்பு போராட்டத்தில் “இந்து பாடசாலை இந்துக்களுக்கே” என எழுதி எழுதி இருந்ததை அவதானிக்க முடிந்தது. இவ்வாறு “பௌத்த நாடு பௌத்தர்களுக்கே” என கூறியதால்தான் முப்பது வருட யுத்தம் நடைபெற்றது என்பதை பதாகையை ஏந்தியவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அன்று சிங்கள மக்கள் தமிழர்களுக்கு செய்ததுக்கும் பதாகையை ஏந்தியவர்கள் சொல்ல வருவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

நாடுமுழுவதிலும் பல முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களும் தமிழ் மாணவர்களும் தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்கள், மாணவர்கள் கல்வி கற்பதை நாம் உணர்ந்து அவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் இந்த பிரட்சனைக்கு சுமூக தீர்வொன்றை நாம் கான வேண்டும்.

இது தொடர்பாக கல்வி அமைச்சர் அகில்விராஜ் காரியவசம், சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டாரவுடன் இன்று கலந்துரையாடியுள்ளேன். இந்த பிரட்சனைக்கு  உரிய தீர்வை எதிர்வரும் நாட்களில் அனைத்து தரப்போடும் கலந்துரையாடி பெறமுடியும் என நாம் நம்புகிறேன்.

அதுவரை இனவாதத்தை தூண்டும் பதவுகளில் இருந்து விலகி இன ஒற்றுமையை சீர்குலைக்கா வண்ணம் செயற்படுமாறு இருதரப்பினருக்கும் நாம் வேண்டுகோள்விடுக்கிறேன்.

No comments:

Post a Comment