கூட்டாட்சி நடாத்த புதிய 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' - sonakar.com

Post Top Ad

Sunday, 15 April 2018

கூட்டாட்சி நடாத்த புதிய 'புரிந்துணர்வு ஒப்பந்தம்'


ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடையேயான கூட்டாட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த வருடம் டிசம்பருடன் நிறைவுக்கு வந்திருந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை தம் பக்கம் இழுப்பதற்கு மஹிந்த அணி கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வந்தது.


இந்நிலையில், அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சு.க அமைச்சர்களுள் ஒரு குழுவினர் உட்பட 16 பேர் ஆதரித்து, அதன் பின்னணியில் தற்போது அரசை விட்டு விலக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

எனினும், எஞ்சியிருப்போருடன் ஒன்றிணைந்து கூட்டாட்சி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் தயாராகி வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment