பாக். வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் நீதிமன்றம் 'தடா'! - sonakar.com

Post Top Ad

Thursday, 26 April 2018

பாக். வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் நீதிமன்றம் 'தடா'!பாகிஸ்தான் ஆளுங்கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவாக வெளியுறவுத்துறை அமைச்சர் குவாஜா ஆசிப் பொது சேவையில் இருக்கத் தகுதியற்றவர் என தீர்ப்பளித்துள்ளது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்.

கடந்த வருடம் ஜுலை மாதம் நவாஸ் ஷெரீபும் இவ்வாறே பதவி நீக்கப்பட்டிருந்தார். ஐக்கிய அரபு அமீரக நிறுவனம் ஒன்றில் பணிபுரிவது தொடர்பான விபரங்களை முழுமையாக வெளியிடாததன் பின்னணியிலேயே ஆசிபுக்கு எதிராகவும் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


குறித்த நிறுவனம் தமது உறவினருடையது எனவும் அமீரக விசாவைத் தக்க வைத்துக் கொள்ள அவ்வாறு நடந்து கொண்டதாகவும் முன்னா நவாஸ் ஷெரீப் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment