கண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு! - sonakar.com

Post Top Ad

Sunday 1 April 2018

கண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு!


குருநாகலில் இருந்து  இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது  கண்டி வித்தியார்த்த கல்லூரிக்கு முன்னால் வைத்து காடையர்கள் குழுவொன்று தாக்குதல் நடாத்தியதைத் தொடர்ந்து இது தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் போது சிங்கள மனிதர் ஒருவர் முன் நிற்று காடையர்களை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.


நேற்றைய தினம் (31)   காலை 8.00 மணி அளவில் மஹிய்யாவ வித்தியார்த்த கல்லூரிக்கு முன்னால் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது:

குருநாகல் தெலியாகொன்ன மற்றும் பறகஹதெனியவில் இருந்து பிரத்தியோக வகுப்புகளுக்காக 13 முஸ்லிம் மாணவர்கள் கண்டிக்குச் சென்றுள்ளனர். 

இந்தப் பேரூந்தில் இரு முஸ்லிம் மாணவிகளும் இருந்துள்ளனர். இதன் போது மதுபோதையில் பஸ்ஸில் பயணித்த நான்கு காடையர்கள் முஸ்லிம் மாணவிகளை சீண்டிக்கொண்டிருக்கவே அங்கிருந்த முஸ்லிம் மாணவர்கள் அவர்களைத் தடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன் பின்னணியில் கண்டி வித்தியார்த்த கல்லூரிக்கு முன்னால் இந்த மாணவர்கள் இறங்கும் போது குறித்த காடையர் குழுவும் இறங்கி தெருவில் இருந்த இரும்பு கம்பியைக் கொண்டு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் போது  நான்கு மாணவர்கள் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ஒருவருடைய கையடக்கத் தொலைபேசி முற்றாக  சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்தை பலர்  பார்த்துக் கொண்டு நிற்க சிங்கள சகோதரர் ஒருவர் துணிந்து வந்து அவர்களை விரட்டி அடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்வத்துடன் தொடர்புடையவர்கள் மஹிய்யாவையைச் சேர்ந்த நான்கு தமிழ் வாலிபர்கள் என தெரிவிக்கப்படுவதோடு இது தொடர்பாக கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மற்றும் உப தலைவர்  ஆகியோருடம் முறையிட்டதைத் தொடர்ந்து  அவர்கள்  பொலிஸாருக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

-இக்பால் அலி

No comments:

Post a Comment