சு.க நிலைப்பாடு தொடர்பில் பௌசி - யாப்பா முரண்பாடு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 4 April 2018

சு.க நிலைப்பாடு தொடர்பில் பௌசி - யாப்பா முரண்பாடு!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிப்பில் கலந்து கொள்ளாது என அமைச்சர் பௌசி தெரிவித்திருந்த கருத்துக்களை நிராகரித்துள்ள ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா, சு.க உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டிலான் பெரேராவும் இதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அதேவேளை, பிரேரணைக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கட்சி மட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


எனினும், பிரேரணையை முறியடிக்கத் தேவையான ஆதரவை தாம் ஏலவே உறுதிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment