திகன பதற்றம்: முஸ்லிம் நபருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்தில் தீ! - sonakar.com

Post Top Ad

Sunday, 4 March 2018

திகன பதற்றம்: முஸ்லிம் நபருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்தில் தீ!


கண்டி, திகன பகுதியில் நிலவி வரும் பதற்ற சூழ்நிலையில் மெதமஹநுவர பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் தீப் பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முஸ்லிம் இளைஞர்களின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிங்கள இளைஞர் உயிரிழந்ததன் பின்னணியில் அப்பிரதேசத்தில் நேற்றிலிருந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் முஸ்லிம்களை அமைதி காக்கும் படியும் வர்த்தக நிலையங்களை மூடிவிடும்படியும் வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருந்தது.பல்வேறு மட்டத்தில் பொலிசாருடன் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் தொடர்பிலிருப்பதோடு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இவ்வாறு வர்த்தக நிலையம் ஒன்றில் தீப் பற்றியுள்ளமையும் சம்பவத்திற்கான காரணம் அறியப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment