கைதாகி விடுதலையான அரசியல்வாதிகளே வன்முறைக்கு காரணம்: அசாத் - sonakar.com

Post Top Ad

Thursday 8 March 2018

கைதாகி விடுதலையான அரசியல்வாதிகளே வன்முறைக்கு காரணம்: அசாத்



மத்திய மாகாணத்தில் இனவிரோத நடவடிக்கைகள் பாரிய அளவில் பூதாகரமாக உருவெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மஹிந்தவின் பெரமுனவின் அரசியல்வாதிகளே பிரதான காரணம் என தெரிவிக்கிறார் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி.

திகன சம்பவத்தின் பின்னணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாவட்ட அமைப்பாளர் ஒருவர், பௌத்த துறவி, பிரதேச சபை உறுப்பினர் மற்றும்  ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இரு முக்கியஸ்தர்களும் கைது செய்யப்பட்டு அதே வேகத்தில் விடுதலை செய்யப்பட்டிருந்தமையே பிரச்சினை மேலும் வளரக் காரணமாக இருந்ததாகவம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை தற்போது ஜனாதிபதியிடம் நீண்ட பட்டியல் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தாமதிக்காது நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அசாத் சாலி மேலும் தெரிவித்தார்.

-I.Shan

No comments:

Post a Comment