பவள விழா கொண்டாடும் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் - sonakar.com

Post Top Ad

Wednesday 14 March 2018

பவள விழா கொண்டாடும் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்




இலக்கிய உலகில் கவிதை எழுதுவதில் தனக்கென ஒரு தனி இடத்தை வகித்து மரபுக்கவிதைகளை யாப்பதில் வல்லவரான பிரபல மூத்த கவிஞர்காப்பியக்கோஜின்னா ஷரிபுத்தீனின் பவள விழாவினை தென்னிந்தியாவில்நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஏற்பாட்டில் இடம்பெறுகின்ற காப்பியக்கோடாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் பவளவிழாவில் அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் என்ற காப்பிய நூலும் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

இவ்விழா  எதிர்வரும் (17) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குசென்னைஎழும்பூர், 39 மாண்டியத் சாலைவெஸ்டியன் பார்க் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் பேராசிரியர்  முனைவர் சேமுமுமுகம்மதலி தலைமையில் நடைபெறும் இவ்விழாவில்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கேஎம்.எம்காதர் மொஹிதீன் நூலை வெளியிட்டு வாழ்த்துரையை வழங்குவதோடுபேராசிரியர்முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் முதற்பிரதியைப் பெற்றுக் கொள்வார்.
 காப்பியக்கோடாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஏற்புரையை வழங்குகிறார்.

சுமார் 25க்கு மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவுக்கு இலங்கையிலிருந்து புரவலர் ஹாஷிம் உமர்சட்டத்தரணி முஹம்மது ஃபைஸல்சட்டத்தரணி கவிஞர்மர்சூம் மௌலானாபொறியியலாளர் கவிஞர்,நியாஸ் ஸமத் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பு பிரதிகளையும் நிகழ்வில் வாழ்த்துரைகளையும் நிகழ்த்துகின்றனர்.


இலங்கை உட்பட சிங்கப்பூர்துபாய், இந்நியா போன்ற நாடுகளிலிருந்தும் பேராசிரியர்கள்புரவலர்கள்எழுத்தாளர்கள்கவிஞர்கள்இலக்கியவாதிகள்ஊடகவியலாளர்கள் எனப் பலதரப்பட்டோரும் விழாவில் கலந்துசிறப்பிக்கவிருக்கின்றனர்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

No comments:

Post a Comment