வன்முறைகளைக் கண்டித்து லண்டனில் இன்று ஆர்ப்பாட்டம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 10 March 2018

வன்முறைகளைக் கண்டித்து லண்டனில் இன்று ஆர்ப்பாட்டம்!


கூட்டாட்சி அரசிலும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடரும் வன்முறைகளைக் கண்டித்து லண்டனில் இன்று மதியம் (உள்ளூர் நேரம்) 12 மணியளவில் ஐக்கிய இராச்சிய பிரதமர் இல்லம் மற்றும் லண்டன் இலங்கைத் தூதரகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியம் பூராகவும் பரந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் இவ்வார்ப்பட்டத்தில் பெருமளவில் கலந்துகொள்ளவுள்ள அதேவேளை ஏனைய சமூகங்களிலிருந்தும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் கைகோர்க்கவுள்ளன.

Nop 10, Downing Street, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் இல்லம்  முன்பாக மதியம் 12 முதல் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள அதேவேளை சோனகர்.கொம் அங்கிருந்து நேரலையை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. 

SLMDI - UK அமைப்பின் முன்னெடுப்பில் நிகழவுள்ள இவ்வார்ப்பாட்டத்தில் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் அணி திரளுமாறு சிவில் சமூகப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அழைப்பு விடுத்திருந்ததோடு பெரும்பாலும் அனைத்து சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து இவ்விடயத்தில் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment