ஜப்பானில் உள்ள ஞானசாரவுக்கு 'பிடியாணை' - sonakar.com

Post Top Ad

Thursday, 15 March 2018

ஜப்பானில் உள்ள ஞானசாரவுக்கு 'பிடியாணை'


ஜப்பானில் மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்ட நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்ட பொது பல சேனா பயங்கரவாதி ஞானசாரவுக்கு பொலன்நறுவயில் வைத்து இனவாத கருத்துக்கள் வெளியிட்ட வழக்குக்சு சமூகமளிக்காத காரணத்தின் அடிப்படையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அரங்கேற்றப்பட்ட ஞானசார தலைமையிலான இனவாத நடவடிக்கைகளின் போது 2017 ஜுன் மாதத்தில் ஒரே நாளில் கைது செய்து, வழக்காடி, பிணையிலும் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அதே வழக்குக்கு சமூகமளிக்காத ஞானசாரவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இவ்வழக்கின் பின்னணியில் பிணை விதிகளை மீறினால் சிறைத் தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment