இன்ஷா அல்லாஹ், உதவ முடிந்தால் உதவுங்கள்! - sonakar.com

Post Top Ad

Saturday, 17 March 2018

இன்ஷா அல்லாஹ், உதவ முடிந்தால் உதவுங்கள்!இருதய சத்திர சிகிச்சையை எதிர்நோக்கியுள்ள மாங்குளம், நேரிய குளத்தைச் சேர்ந்த 04 பெண் குழந்தைகளின் தந்தையான ஏ.சி. யூசுப் லெப்பை எனும் சகோதரர் தனது சிகிச்சைக்கான செலவுகளை ஈடு செய்ய உதவ மனம் படைத்தவர்களிடமிருந்து நிதியுதவியை எதிர்பார்க்கிறார்.


தீவிர இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு இருதய சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும்படி வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதுடன் சுமார் 9 லட்சம் ரூபா தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நிலையில் அத்தனை பெரிய தொகையை திரட்டிக் கொள்ள இயலாத நிலையில் கருணை உள்ளம் படைத்தவர்களின் உதவி நாடப்படுகிறது.

உதவ மனம் படைத்தோர் பயனாளியின் குடும்ப வங்கிக் கணக்குக்கு நேரடியாகவே தமது உதவித் தொகையை அனுப்பி வைக்கும்படி வேண்டப்படுகிறீர்கள்.

Name – Asmila Yoosuf
Bank – Bank of Ceylon
Account No – 8016135
Branch - Vavuniya

Contact: Miss. A. Yousuf , 0773673270

மருத்தவ ஆவணங்கள், பள்ளிவாசல் கடிதம் கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment