பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: ரணில் - sonakar.com

Post Top Ad

Saturday, 10 March 2018

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: ரணில்
கண்டியில் பல்வேறு இடங்களில் இனவன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் இழப்பீட்டை வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.

இன்றைய தினம் அமைச்சர் பட்டாளம் சகிதம் கண்டி சென்ற அவர் அங்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும், சட்ட ஒழுங்கு அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இனவிரோத வன்முறைகளை நிறுத்த விடுத்த எந்த உத்தரவும் மதிக்கப்படவில்லையென்பதோடு பொலிசாரும் கைகட்டிப் பார்த்திருந்தனர்.


அம்பாறையில் பொலிசாரே அநீதியாக நடந்துகொண்டதை ஏற்றுக்கொண்ட ரணில் அதற்கும் விசாரணைக் குழு அமைத்ததாக கடந்த வாரம் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

-ஜே.எம். ஹபீஸ்

No comments:

Post a Comment