லண்டன் ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கில் திரண்டு வந்த முஸ்லிம்கள்! (படங்கள்) - sonakar.com

Post Top Ad

Saturday, 10 March 2018

லண்டன் ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கில் திரண்டு வந்த முஸ்லிம்கள்! (படங்கள்)


அம்பாறை மற்றும் மத்திய மாகாணத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களையும் அரசின் அசமந்தப் போக்கினையும் எதிர்த்து இன்றைய தினம் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாடெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.ஐக்கிய இராச்சிய பிரதமர் இல்லத்தின் முன்பாக ஆரம்பித்து பின் லண்டன் இலங்கைத் தூதரகம் வரை சுமார் 9 கி.மீ நடைபவனியாகச் சென்ற இவ்வார்ப்பாட்டப் பேரணியில் பெண்களும் குழந்தைகளும் கூட ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.


தூதரகத்தை அடைந்த பேரணி அங்கு ஹைட் பார்க் கார்டன்ஸ் வீதி நிரம்பி வழியுமளவுக்கு அப்பாதையை முற்றுகையிட்டதோடு இலங்கைத் தூதரகம் அதிரும் அளவுக்குத் தமது உணர்வுகளை வெளியிட்டிருந்தனர்.


எனினும், நாகரிகமாகவும் ஒழுக்கக் கோப்புடனும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளதோடு நீதி நிலை நாட்டப்படுவதோது துரிதமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோசமிடப்பட்டது.


ஆர்ப்பாட்டத்தின் சில படங்களையே இங்கு காண்கிறீர்கள்.

No comments:

Post a Comment