இன வன்முறை: சவுதி அரேபியாவில் கண்டன நிகழ்வு - sonakar.com

Post Top Ad

Friday, 9 March 2018

இன வன்முறை: சவுதி அரேபியாவில் கண்டன நிகழ்வு



இலங்கையில் நடைபெறும் முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களை கண்டித்து இன்று(09) இலங்கை நாட்டின் நேரப்படி பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை வாழ் அனைத்தின மக்கள்  ஒன்று சேர்ந்து சவூதி அரேபியா நாட்டின் இலங்கை தூதரகமான றியாத் ஒலயாவில் நிகழ்வொன்றை நடாத்தியிருந்தனர்.

இதன் போது கண்டி திகன தாக்குதல் உட்பட இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இடம் பெற்ற முஸ்லீம்களின் மதஸ்தலமான பள்ளிவாயல்கள் தாக்குதல் பொருளாதார சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பு போன்றவற்றை இதன்போது வண்மையாக கண்டித்து இத்தாக்குதல்களை உடனடியாக இலங்கை அரசாங்கம் நிறுத்தும் படியான மஹஜர் ஒன்றினையும் சவூதி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அஸ்மி தாஸிம் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இலங்கையர்கள் வாழும் பல்வேறு நாடுகளில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



-ஹஸ்பர் ஏ ஹலீம்

No comments:

Post a Comment