திகன பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு; ஆங்காங்கு வன்முறைக்கு முயற்சி - sonakar.com

Post Top Ad

Sunday, 4 March 2018

திகன பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு; ஆங்காங்கு வன்முறைக்கு முயற்சி


திகன பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் பல இடங்களில் நிலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்ற அதேவேளை பொது மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இதனையும் மீறி ஆங்காங்கு வன்முறை முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் வாகனப் போக்குவரத்துகளை தவிர்த்துக்கொள்ளுமாறு பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.மெதமஹநுவர பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ள நிலையில் மேலும் ஒரு வாகனத்தின் மீது கல்வீச்சு சம்பவமும் இடம்பெற்றுள்ளது. சம்பவங்களின் பின்னணி குறித்த சந்தேகம் நிலவுகின்ற போதிலும் ஊர்ஜிதப்படுத்தப்பட முடியாத சூழல் நிலவுகின்ற அதேவேளை கடும்போக்குவாதிகள் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருப்பதனால் அனைவரும் பொறுடையுடனும் அவதானத்துடனும் நடந்துகொள்ளும்படி சமூக ஆர்வலர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment