அளுத்கம: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கி வைப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 22 March 2018

அளுத்கம: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கி வைப்பு



அளுத்கம கலவரத்தில் உயிரிழந்தவர்களது குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு நட்டஈடு இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது. 


எனினும், பெருமளவு சொத்துக்களை இழந்தவர்களுக்கான நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுக்க அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அதன் அங்கீகாரத்தை பெற்ற பின்னர் வெகு விரைவில் அதற்கான நட்டஈடுகளும் வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

அளுத்கம, பேருவளை கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்றது. புனர்வாழ்வு அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நட்டஈடு வழங்கி வைக்கும் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். 


இதன்போது, புனர்வாழ்வு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட அளுத்கம கலவரத்தில் உயிரிழந்தவர்கள் மூவரது குடும்பத்தினருக்கும் தலா 20 இலட்சம் ரூபா வீதமும், காயமடைந்தவர்கள் 12 பேருக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதமும், சிறு சொத்துக்களை இழந்தவர்கள் 84 பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதமும் மொத்தம் சுமார் 15,655,000 ரூபா வழங்கி வைக்கப்பட்டது. 

-R.Hassan

No comments:

Post a Comment