அம்பாறை: கொத்து ரொட்டியில் காணப்பட்டது 'மாவு' தான்: அரசாங்கம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 8 March 2018

அம்பாறை: கொத்து ரொட்டியில் காணப்பட்டது 'மாவு' தான்: அரசாங்கம்!தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகளின் அடிப்படைச் சம்பவமாக அமைந்த அம்பாறை கொத்து ரொட்டி சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளது அரசாங்கம்.

குறித்த பதார்த்தத்தை ஆய்வு செய்த பகுப்பாய்வு அதிகாரி ஏ.வெலியங்ககே பொலிசாருக்கு இதனை உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.குறித்த கொத்து ரொட்டியில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டிருப்பதாக உருவாக்கப்பட்ட சர்ச்சை பாரிய அளவில் சிங்கள மக்களை சென்றடைந்ததோடு ஏலவே இழையோடிக்கொண்டிருந்த இனவாதத்தைத் தூண்டி விட்டிருந்தது. எனினும், அம்பாறை தாக்குதல்களை ஐந்து வெ வ்வேறு சம்பவங்களாகப் பிரித்து வழக்குத் தொடர்ந்த பொலிசார் உணவகத்தில் இடம்பெற்ற சர்ச்சையின் பின்னணியில் மாத்திரம் சரணடைந்த ஐவரை நீதிமன்றில் ஒப்படைத்து பிணையும் பெற்றுக் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது அரசாங்கம் உத்தியோகபூர்வமான விளக்கம் வழங்கியுள்ளதோடு அதில் காணப்பட்டது மாவுத்துண்டு தான் என உறுதி செய்துள்ளது.

அம்பாறை முதல் திகன வரை பொலிசார் அசமந்தப் போக்கே வன்முறை துரிதமாக உருவெடுக்கக் காரணமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment