கண்டி வன்முறை: தகவல் உதவி கோருகிறது பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Saturday, 10 March 2018

கண்டி வன்முறை: தகவல் உதவி கோருகிறது பொலிஸ்!


இலங்கையின் புலனாய்வுத்துறை உறங்கச் சென்றிருந்ததா? எனும் கேள்வியெழுப்பும் வகையில் அம்பாறை மற்றும் திகன பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தற்போது பொது மக்களிடம் தகவல் உதவி கோருகிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.

வன்முறையில் ஈடுபட்ட தனி நபர் அல்லது குழுக்கள் தொடர்பில் தமக்குத் தகவல் தரும் படி தற்போது பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ள பொலிசார் வன்முறையின் போது தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தமை நினைவூட்டத்தக்கது.


இந்நிலையில் 011 3024892 அல்லது 011 3024883 ஆகிய இலக்கங்கள் ஊடாகத் தொடர்பு கொண்டு தகவல் தரும்படி பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment