நீதியை நிலை நாட்டுகிறேன்; பொறுப்பைத் தாருங்கள்: ரங்கே பண்டார - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 March 2018

நீதியை நிலை நாட்டுகிறேன்; பொறுப்பைத் தாருங்கள்: ரங்கே பண்டாரகட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவன்முறைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தி நீதியை நிலை நாட்டத் தன்னால் முடியும் என தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, ரணில் வசம் உள்ள சட்ட, ஒழுங்கு அமைச்சைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரங்கு, அவசர கால சட்டம் போன்ற கண்துடைப்புகளை மீறி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கையெதையும் எடுக்கத் தவறியுள்ள நிலையில் வன்முறை பரவி வருகிறது.இந்நிலையிலேயே, அண்மையில் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப் போவதாகவும் தெரிவித்திருந்த பாலித ரங்கே பண்டார தன்னிடம் சட்ட,ஒழுங்கு அமைச்சை ஒப்படைத்தால் நீதியை நிலை நாட்ட முடியும் என சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment