அம்பாறை: வங்குரோத்து அரசியலை மறைக்க ஹர்த்தாலுக்கு அழைப்பு: சபீஸ் - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 February 2018

அம்பாறை: வங்குரோத்து அரசியலை மறைக்க ஹர்த்தாலுக்கு அழைப்பு: சபீஸ்


அம்பாறையில் திங்களிரவு இடம்பெற்ற இனவாத தாக்குதல் திட்டமிட்ட செயல் மாத்திரமன்று மறுநாள் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நிகழ்வுகளில் ஆளுங்கட்சி முக்கிய ஆதரவாளர்களும் முன்னிலையில் இயங்கிய நிலையில் தமது யானைப் பாகன் எனக் கூறிக்கொள்ளும் முஸ்லிம் கட்சியின் உறுப்பினர் பினாமிகள் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால் அழைப்பு விடுத்து வருகின்றமை கண்டிக்கத்தக்கதாகும்.


திட்டமிட்ட காட்டுமிராண்டித்தனத்தை நடாத்தியவர்களின் தேவை,  இவ்வாறான சம்பவத்தினை நடாத்த வேண்டும் அதன்மூலம் முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்து ஹர்த்தால் செய்யவேண்டும்  நாடுமுழுதும் இதைப்பற்றின பேச்சுக்கள் மாத்திரமே நடைபெறவேண்டும் என்பதே ஆகும். அப்போதுதான்  வங்குரோத்து அரசியல் தலைவர்கள்  தங்கள்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பர் என்ற நம்பிக்கையாகும்.


பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகளும் கச்சேரி மற்றும் அரசாங்க அதிபர் காரியாலயம் போன்றவற்றுக்கு அருகாமையில் நடாத்தப்பட்ட வன்முறைகளை அடக்க முடியாமல் கைகட்டி பார்த்திருந்த காவல்படை அதிகாரிகளையாவது இடமாற்றம் செய்ய வக்கில்லாத மக்களான நம்மையும் நம்மை பிரதிநிதித்துவ படுத்துகின்ற தலைமைகளையும்   நாம் என்னவென்று சொல்லுவது.

தேசவழமை சட்டம் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் அம்பாறையில் முஸ்லிம்கள் காணிகளை விற்க முடியும் வாங்க முடியாது என்ற சட்டத்தை உருவாக்கியவர்கள் வாழும்ம் காலமிது. அதேபோன்று முஸ்லிம்களுக்கு தாக்குவதற்கு  நடுநிசி 12 மணிக்குகும் தயாராக இருக்கும் இனவாத கும்பல்களும் மேலோங்கியுள்ளன.

அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வரும் இவ்வேளையில் நாம் பொறுமையைக் கடைப்பிடிப்பதே சிறந்ததாகும்.


-எஸ்.எம். சபீஸ்

No comments:

Post a comment