அமித் உட்பட இனவாதிகள் 14 நாட்கள் 'தடுத்து வைப்பு'! - sonakar.com

Post Top Ad

Friday, 9 March 2018

அமித் உட்பட இனவாதிகள் 14 நாட்கள் 'தடுத்து வைப்பு'!நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட பேரினவாதி அமித் வீரசிங்க மற்றும் சகாக்கள் அவசர கால சட்டத்தின் கீழ் 14 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் தற்போது விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர்களின் செயற்பாடு மற்றும் தொடர்பு குறித்து 'விசாரணை' நடைபெறவுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.


இனவன்முறையைத் தூண்டிய குறித்த நபரின் திட்டமிடலிலேயே பல்வேறு வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள போதிலும் தற்சமயம் அவசர கால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் விசாரணையின் பின்னரே எவ்வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்பதை அறியமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment