முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வலைத்தளம் தலைமறைவு - sonakar.com

Post Top Ad

Monday, 28 December 2015

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வலைத்தளம் தலைமறைவு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமானது (MRCA), இலங்கை முஸ்லிம்களின் வக்ப், ஹஜ், கலாச்சாரம், தொண்டு அமைப்புக்களை பதிவு செய்தல் ஆகிய விடயங்களை கையான்டுவரும் ஒரு அரச திணைக்களமாகும். இதன் வலைத்தளமானது http://www.muslimaffairs.gov.lk என்ற முகவரியில் இயங்கிவந்தது. 
இந்த வலைத்தளம் இலங்கையிலுள்ள மஸ்ஜித்கள், மதரசாக்கள் பற்றிய விபரங்கள், ஹஜ் ஏற்பாடுகள், வக்ப் நடவடிக்கைகள், நோன்புகால ஏற்பாடுகள், வருடாந்த அறிக்கைகள், மீலாத் விழாக்கள், இலங்கையிலுள்ள உலமாக்கள், முஸ்லிம் கல்விமான்கள் போன்ற விடயங்களைக் கொண்டிருந்ததோடு, முஸ்லிம்களின் -  இலக்கியம், கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல், சரித்திரம், உரிமைகள், கல்வி, சனத்தொகை விபரங்கள் என்று மேலும் பல மிகவும்பெறுமதியான தகவல்களையும் கொண்டிருந்தது. ஆனால் இந்த வலைத்தளம் எந்தவித முன்னறிவித்தலுமின்றி தலைமறைவாகிவிட்டது.ஒவ்வொரு பெட்டிக்கடைக்கும் வலைத்தளமும் பேஸ்புக் பக்கமும் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் இருபது இலட்சம் முஸ்லிம்களின் விடயங்களைக் கையாளும் ஒரு அரச திணைக்களத்தின் வலைத்தளம் இவ்வாறு தலைமறைவானது மிகவும் துரதிஷ்டமான விடயமாகும். இந்த வலைத்தளமானது,  இலங்கை முஸ்லிம்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கக்கூடிய ஒரு தளமாக விழங்கியதுடன், சராசரியாக ஒரு நாளைக்கு 236 பார்வையாளர்களையும் இந்த வலைத்தளம் கொண்டிருந்தது. அத்தோடு இலங்கை முஸ்லிம்கள் பற்றிய புள்ளிவிபரங்களையும், தகவல்களையும் நூல்களில் பிரசுரிப்பதற்க்கும் மேற்படி வலைத்தளம் உதவியாக இருந்தது. அத்தகைய நுல்களின் பெயர்கள் சில...In My Mother’s House: Civil War in Sri Lanka (page 266)  /  Religious Diversity in Southeast Asia and the Pacific:National Case Studies (page 115)  /  Minority Nationalisms in South Asia (page 122)  /  Persuasion, Coercion, and Neglect: Understanding State Policy and the Mobilization of Muslim Minorities in Asia (page 368).
இலங்கையிலுள்ள அனைத்து அமைச்சுக்களும், அரச தினைக்களங்களும் வலைத்தளங்களைக் கொண்டுள்ளதோடு, பொளத்த (http://www.buddhistdept.gov.lk/) மற்றும் இந்து விவகாரங்களுக்கான திணைக்களங்களும் (http://www.hindudept.gov.lk/) மிகச்சிறந்த வலைத்தளங்களை கொண்டுள்ளது. MRCA, முன்பிருந்த வலைத்தளத்தைவிட ஒரு சிறந்த வலைத்தளத்தை விரைவில் உருவாக்கும் என நம்புகின்றோம்.  

-Abu Ahmed

No comments:

Post a Comment