தனது அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்து விட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயார் என தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களுள் ஒருவரான ரோஹித ராஜபக்சவை முதன்மை வேட்பாளராகக் களமிறக்கப் போவதாக பெரமுனவினர் தகவல் கசிய விட்டுள்ளனர்.
வயம்ப மாகாண சபையை சுதந்திரக் கட்சி வென்றெடுக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள தயாசிறி, அதற்காகத் தாம் பதவிகளைத் தியாகம் செய்யத் தயார் என அறிவித்திருந்தார். அண்மைக்காலமாக அரசாங்கத்தின் மீதான அதிருப்தியையும் வெளியிட்டு வரும் அவரின் இவ்வறிவித்தலுக்கு பதில் அறிவிப்பாக பெரமுனவினர் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.
350,000 க்கு அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சரான தயாசிறி, மஹிந்த ராஜபக்சவும் குருநாகலில் போட்டியிட்டிருந்த நிலையில் 155,000 விருப்பு வாக்குகளைப் பெற்றே நாடாளுமன்றம் தேர்வாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment