மேலும் ஒரு மரணத்தை ரிசாத் வீட்டோடு இணைக்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Saturday 24 July 2021

மேலும் ஒரு மரணத்தை ரிசாத் வீட்டோடு இணைக்க முஸ்தீபு

 


ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த சிறுமி மரணத்தின் பின்னணியிலான விசாரணைகளை நடாத்தி வரும் பொலிசார் 20க்கு மேற்பட்ட வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர். அதில் முன்னாள் பணியாளர்களும் உள்ளடக்கம்.


இந்நிலையில், முன்னாள் ரிசாத் வீட்டில் பணி புரிந்த யுவதியொருவர் (தற்போது 22 வயது) தான் ரிசாதின் மைத்துனரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளதாகவும், வீட்டின் எந்தப் பகுதியில் தனக்கு அநீதி இடம்பெற்றதென விளக்கமளித்ததாகவும் பொலிசாரை ஆதாரங்காட்டி தகவல்கள் வெளியாகியிருந்ததுடன் ரிசாதின் மைத்துனர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.


மேலும் சில முன்னாள் பணியாளர்கள் விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், ஏலவே பம்பலபிட்டி பகுதியில் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட யுவதியொருவர் பற்றியும் விசாரிக்கப்படுவதுடன் அப்பெண்ணும் ரிசாத் வீட்டில் சில காலம் பணி புரிந்ததாகவும் அந்த விவகாரம் தொடர்பிலும் தற்போது தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.


ரிசாத் பதியுதீன் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் இவ்வாறு துஷ்பிரயோகம் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment