இலங்கை வரும் அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்களோ அதிகாரிகளோ வியன்னா உடன்படிக்கையை மீறி எவ்விதத்திலும் எல்லை மீறலில் ஈடுபடவில்லையென தெரிவிக்கிறது இலங்கைக்கான அமெரிக்க தூதரகம்.
கடந்த மாதம் ஹில்டன் ஹோட்டலில் வைத்து அமெரிக்க அதிகாரிகள் தமது பயணப்பொதிகளை பரிசோதனை செய்ய மறுத்த விடயம் தொடர்பிலேயே விமல் வீரவன்ச விசனம் வெளியிட்டிருந்ததுடன் அமெரிக்கா இலங்கைக்குள் ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பிலேயே அமெரிக்க தூதரகம் இவ்வாறு விளக்கமளித்துள்ள அதேவேளை ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியிலான விசாரணைகளில் அமெரிக்க புலனாய்வுத்துறை ஈடுபட்டுள்ளமை குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment