ஜனாதிபதி மாளிகையை அண்மித்துக் கொண்டிருக்கும் போராளிகள், வழியில் தம் மீது தண்ணீர் பாய்ச்சலுக்காக பொலிசாரால் பயன்படுத்தப்பட்ட வண்டியொன்றைக் கைப்பற்றியுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும், தனது பதவிக்காலம் முடியும் வரை விடப் போவதில்லையென அடம்பிடித்து அதிகாரத்தில் வீற்றிருக்கிறார்.
இந்நிலையில், இன்றைய போராட்டங்களை தடுக்க நீதிமன்றம் ஊடாக முயற்சித்த பொலிசார் அதில் தோல்வி கண்டிருந்த நிலையில், ஊரடங்கை அறிவித்து பின்னர் வாபஸ் பெற்றிருந்தனர். தற்போது போராட்டம் ஜனாதிபதி மாளிகையை அண்மித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment