லண்டனிலிருந்து வந்த பெண் சடலமாக மீட்பு - sonakar.com

Post Top Ad

Tuesday 28 December 2021

லண்டனிலிருந்து வந்த பெண் சடலமாக மீட்பு

 


லண்டனிலிருந்து நாடு திரும்பிய 67 வயது பெண்ணொருவர் கிளிநொச்சி, அம்பாள்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பார்ப்பதற்காக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து குறித்த நபர் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


வீட்டிலும் இரத்தக்கறை காணப்படுவதாகவும் கொலையா? என விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment