கைதிகளுக்கு 'மொபைல்' கொடுக்கும் அதிகாரி கைது - sonakar.com

Post Top Ad

Friday, 29 October 2021

கைதிகளுக்கு 'மொபைல்' கொடுக்கும் அதிகாரி கைது

 


போகம்பற சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்கு கைத் தொலைபேசிகள் மற்றும் அதற்கான உதிரிப் பாகங்களை வழங்கி வந்த குற்றச்சாட்டில் சிறைச்சாலையின் பிரதான மருத்துவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.


மருத்துவ பரிசோதனைகளுக்காக வர வைத்து, அங்கு பணத்தைப் பெற்றுக் கொண்டு இவ்வாறு தொலைத் தொடர்பு சாதனங்களை வழங்கி வந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பல்லேகல பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.


இலங்கையின் போதைப் பொருள் வர்த்தகத்தின் பெரும் பகுதி சிறைச்சாலைகளிலிருந்தே நிர்வகிக்கப்படுவதாகவும் கடந்த ஆட்சியில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment