NTJ நௌபரை உறுதிப் படுத்த அடையாள அணிவகுப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday 25 June 2019

NTJ நௌபரை உறுதிப் படுத்த அடையாள அணிவகுப்பு


தடை செய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் எனும் அமைப்பின் அடுத்த தலைவராக வரக்கூடியவர் என நம்பப்பட்டிருந்த நௌபர் மௌலவியை அடையாள அணி வகுப்பின் ஊடாக உறுதி செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் பொலிசார்.



தம்புள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்த நௌபர் மௌலவியென அறியப்படும் குறித்த நபரை ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேக நபர்கள் ஊடாக அடையாளங் கண்டிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்த நபர்கள் பல முக்கிய தகவல்களை வழங்கி வருவதாகவும் ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல் சஹ்ரானின் வற்புறுத்தலின் பேரில் நடந்ததாகவே கைதானவர்கள் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment