அதிகார பகிர்வு என்ற 'பேச்சே' இருக்கக் கூடாது: நாலக தேரர் - sonakar.com

Post Top Ad

Sunday 4 April 2021

அதிகார பகிர்வு என்ற 'பேச்சே' இருக்கக் கூடாது: நாலக தேரர்

 


புதிய அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி முறைமையைத் தவிர அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது என உத்தேச அரசியல் யாப்பு மாற்றத்திற்கான முன்மொழிவைக் கையளித்து கருத்து வெளியிட்டுள்ளார் பெங்கமுவே நாலக தேரர்.


இதேவேளை, நாட்டின் பிரதான அரச கரும மொழியாக சிங்களமே இருக்க வேண்டும் எனவும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் இரண்டாம் தர மொழிகளாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் எனவும் பௌத்த தேரர்கள் சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்ற அதேவேளை இன-மத பிரிவுகளுக்கான தனிப்பட்ட சலுகைகளும் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்து பௌத்த தேரர்கள் குழு தமது ஆலோசனைகளை நிபுணர்கள் குழுவிடம்  நேற்று சனிக்கிழமை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment