பல தார மணத்திற்கும் 'தடை' விதிக்க வலியுறுத்து - sonakar.com

Post Top Ad

Sunday 7 March 2021

பல தார மணத்திற்கும் 'தடை' விதிக்க வலியுறுத்து

 


முஸ்லிம் தனியார் சட்டம் ஊடாக அனுமதிக்கப்பட்டிருக்கும் பலதார மணத்திற்கும் தடை விதிக்க அமைச்சரவையில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பெண்களின் திருமண வயதினை 18 ஆக நிர்ணயிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள அமைச்சரவை, பல தார திருமணத்தையும் தடை செய்வதோடு விவாகரத்து விடயங்களை காதி நீதிமன்றங்களிலிருந்து நீக்கி நாட்டின் ஏனையோர் பின்பற்றும் சட்டத்தின் அடிப்படையிலேயே அவற்றையும் கையாள வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.


எனினும், முஸ்லிம் விவாக - விவாகரத்து விடயங்களை தாம் கவனமாகக் கையாளப் போவதாகவும் விசேட ஆலோசனைக் குழு அமைத்து அதனூடாக செயற்படப் போவதாகவும் முன்னதாக நீதியமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment