மாற்றத்தைத் தேடும் முஸ்லிம் தேசியம் - sonakar.com

Post Top Ad

Saturday 9 March 2019

மாற்றத்தைத் தேடும் முஸ்லிம் தேசியம்


உடல் உளப் பாதிப்பற்ற சாதாரண மக்கள் தமது பசியைப் போக்க தாமாகவே உழைக்க வேண்டும் என்பதைப் போல முஸ்லிம் அரசியல் சக்தியைப் பலப்படுத்த அல்லது முஸ்லிம் தேசியத்திற்கான ஓரெ தலைமையை தயார்படுத்த முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய காலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக தற்போது பொதுத்தளங்களில் பேசப்பட்டுக் கொண்டிப்பதை அவதானிக்க முடிகிறது.


முஸ்லிம் தேசியத்தின் வாக்குகளினூடாக பாரளுமன்றத்திற்கு; சென்றவர்களுக்குக் கிடைக்கின்ற சலுகைகளை அடிப்படைச் சம்பளம், தபால் செலவு, வாசஸ்தளங்களைப் புனர்நிர்மானம் செய்தல், வாகனக் கொள்வனவு, சபை அமர்வுகள், ஓய்வூதியம் என்பவற்றின் அடிப்படையில் நோக்குகின்றபோது பெறுகின்ற சலுகைகள், அச்சலுகைகளின் அநுகூலங்கள் மூலம் வாக்களித்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கு இதயசுத்தியுடனும் நன்றியுணர்வோடும் அக்கறை காட்டப்படுகிறதா என வினவப்படுகிறது.

வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்கள் மாத்திரமின்றி தென்னிலங்கை முஸ்லிம்களும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள. அந்தப் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் தலைமைகளினால் தொடர்ச்சியாக ஒன்றுபட்டு அழுத்தம ;கொடுக்க முடியாத நிலையே கடந்த பல வருடங்களாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கட்சி அரசியலின் மேலாதிக்கம் மற்றும் முக்கியத்துவங்கள் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்களுக்கான தீர்வை நோக்கி ஒரே அணியில் பயணிக்க முடியாத நிலையானது முஸ்லிம் தேசியம் மாற்றத்தை தேட வேண்டிய நிலையை உணர்த்தி நிற்கிறது.

ஒரு வண்டியை நான்கு குதிரைகள் வௌ;வேறு திசைகளில் இழுத்துச் செல்லும்போது வண்டியில் இருப்பர்கள் எதிர்நோக்கும் அவஷ்த்தைக்கு ஒத்ததானதொரு அரசியல் சூழ்நிலைக்கு முஸ்லிம் தேசியம் தள்ளப்பட்டுள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்ட வேண்டும். 

அவஸ்த்தைகளுக்குள் முஸ்லிம் தேசியம்

வடக்கு கிழக்கு உட்பட தென்னிலங்கையில் வாழும் முஸ்லிம்கள் வெளிப்படையான பிரச்சினைகளை மாத்திரமின்றி மறைமுகமான பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள. தென்னிலங்கையின் காலி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் பெரும்பான்மை ஆசிரியர்களினால் பெரும்பான்மைமயமாக்கப்பட்டுள்ளதான ஆய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேல்மாகாண பாடசாலைகளும் பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருப்பதோடு, சேரிப்புற வாழ்க்;கைச் சூழல் அவர்களின் வாழ்வை பின்நோக்கி நகர்த்திக் கொண்டிருப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது. இத்தகையவர்களுக்க மாடிவீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டாலும் அவையும் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாக வழிவகுக்கும் என்பதே சமூக ஆய்வாளர்களின் கருத்தாகவுள்ளது. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு தென்னிலங்கை முஸ்லிம்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள. இருப்பினும் முஸ்லிம் அரசியல் தரப்புக்;கள் இப்பிரச்சினைகளுக்கான தீhவை ஒன்றிணைந்து முன்கொண்டு செல்வதற்குப் பதிலாக தனித்தனியாக இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அதில் தங்களது பெயர்களைப் பதிவ செய்துகொள்வதற்கும் முயற்சி எடுப்பதை வெளிப்படையாகக் காண முடிகிறது.

இந்நிலையில் கிழக்கில், திருமலை ஷன்முகா முஸ்லிம் ஆசிரியைகள் இடமாற்ற விவகாரம்.  கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட எம்.கே.எம். மன்சூர்  அந்நியமனத்திலிருந்து நீக்கப்பட்டமை. முன்னாள் பணிப்பாளர் எம்.ரி நிஸாம் மீண்டும்  புதிய  கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் அவரது நியமனத்திற்கானகெதிரான நீதிமன்ற இடைக்காலத் தடை உத்தரவு  நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலைமைகளும் நியமனங்களும் எதனால் உருவானது அரசியல் தலையீடுகள் ஏற்படுத்துகின்ற காயங்களால் பாதிக்கப்படுவது யார்? என்ற கேள்விகளுக்கும் விடை தேடவேண்டியுள்ளது.    இதனிடையே முஸ்லிம் அடிப்படைவாதம், பயங்கரவாதம் என்ற கதைகளுக்குள் ஹஜ் குழு நியமனம், வன்செல்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான இழப்பீட்டில் தாமதம், தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம், முஸ்லிம் தனியார் திருத்தச் சட்டம். அவை தொடர்hன வாதப் பிரதிவாதங்கள், புனித குர்ஆனைக் கேள்விக்குட்படுத்தும் வகைளிலான முஸ்லிம் தலைமையின்  மேடைப் பேச்சுக்கள், மௌலவி ஆசிரியர் நியமனத்திலுள்ள இழுபறி,  மன்னார் சிலாவத்துறை காணி மீட்டுப் போராட்டம், புத்தளம் அறுவாhக்கல்லு முதல் அட்டாளைச்சேனை அஷ்ரப் நகர்   வரையான குப்பைப் பிரச்சினை,  வக்பு சட்டத்திருத்தம், அம்பாறை கரும்பு செய்கையாளர்களின் பிரச்சினை, அக்கறைப்பற்று வட்டமடு பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் நீண்ட, மற்றும் குறுகிய காலப்பிரச்சினைகளாக, அவஷ்த்தையளிக்கத்தக்க விடயங்களாக முஸ்லிம் தேசியத்தில்  காணப்படுகின்றன.

இருந்தபோதிலும், அப்பிரச்சினைகளை விரைவாக நிறைவேற்றி வைக்க முஸ்லிம் தேசியத்தின் மக்கள் பிரதிநிதிகள் எந்தளவு தூரம் தங்களது அதிகாரத்தை ஒன்றிணைந்து பிரயோகித்திருக்கிறார்கள். அத்துடன் இப்பிரச்சனைகளைத் தீர்க்கக் கோரி எந்தத் தலைமையிடம் எடுத்துரைப்பது என்ற அரசியல் குழப்பத்தில் முஸ்லிம் தேசிய மக்கள்  தொடர்;ந்தும்  இருந்து வருவதை அவதானிக்க முடிகிறது. பிரதேச, பிராந்திய, கட்சி அரசியலுக்க அப்பால் முஸ்லிம் தேசியத்தின மக்கள் பிரதிநிதிகளுக்கிடையில் ஒரு சில விடயங்களுக்காக புரிந்துணர்வுடன் கூடி ஒற்றுமை காணப்பட்டாலும் பல விடயங்களில் அவற்றைக் காண முடிவதில்லை.

கீரைக் கடைக்கும் எதிர்கடை உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நியாயம் இருந்தாலும், எந்தக் கடையில் பொருட்கொள்வனவு செய்வது என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நுகர்வோர்தான். அந்நுகர்வோரின் சரியான தீர்மானமே இறுதியானதாகும். இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் உள்ள அரசியல் கட்சிகள் குறித்து தீர்மானிக்க வேண்டி தருணத்தில் முஸ்லிம் தேசிய காணப்படுகிறது. அதிலும் கிழக்கு முஸ்லிம்கள் யாரை அரசியல் தலைமையாக ஏற்றுக்கொள்வது என்று இன்னும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், கிழக்கு முஸ்லிம்களின் வாக்குப் பலம் கட்சி அரசியலினால் பலவீனப்படுத்தப்படும் சூழ்நிலை நடைபெறும் தேர்தல்கள் மூலம் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் பரவலாக உணரப்படுகிறது.

இவ்வருடமோ அல்லது அடுத்த வருடமோ நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற மாகாண சபைத் தேர்தல் அல்லது பாராளுமன்றத் தேர்தல்களில்; முஸ்லிம் சமூகம்சார் கட்சியைத் தலைமைகளினால்  யானையிலும், கையிலும், மரத்திலும், மயிலிலும் ஏன் மொட்டுவிலும் எனப் பல சின்னங்களில் போட்டியிட வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள். 

இவ்வாறு வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றபோது   வேட்பாளர்களில் யாரை ஆதரித்து எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்ற தடுமாற்றமும் குழப்பமும் உருவாகும். இதனால் ஒட்டுமொத்த முஸ்லிம் தேசியத்திற்குமான குறிப்பாக வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்குமான தலைமை வகிக்;கக் கூடிய அரசியல் தலைமைத்துவத்துக்கான இடைவெளி; அல்லது வெற்றிடம் நிரப்பப்படுவது அவசியமாவுள்ளது.

சமுதாயத்தின் மத்தியில் வாழ்ந்து, அச்சமுதாயத்தின் விருப்பு வெறுப்புக்களில் பங்குகொண்டு, தேசத்தினதும், தேசத்தின் சொத்துக்களான சமுதாயத்தினதும்  எழுச்சிக்கும,; வளர்ச்சிக்கும் உறுதுணையாகச் செயற்பட்டு, அச்சமூகத்தின் உரிமைக்காகவும், பிரதேசத்தினதும், நாட்டினதும் முன்னேற்றத்திற்காகவும் குரல் கொடுத்தவர்கள், குரல் கொடுப்பவர்கள்   மண்ணையும், அம்மண்ணின்; மக்களையும்; விட்டு பிரிகின்றபோது, அவர்களால் சமுதாயத்தில் ஏற்படுகின்ற இடைவெளி நிரப்பப்படுவதற்கு பல நூறு ஆண்டுகள் நகர்கின்றன அல்லது அவ்வெற்றிடங்கள்; நிரப்பப்படாமல் வெற்றிடமாகவே காணப்படுகின்றன.

சமூகங்களுக்கிடையே ஒற்றுமையும், புரிந்துணைர்வும், ஒருமைப்பாடும் ஏற்படுத்தப்பட வேண்டும். அவற்றினால் மக்களும், பிரதேசங்களும், நாடும்; சுபீட்சமும், நிம்மதியும் அடைய வேண்டும் என்ற உன்னத மனப்பாங்கு கொண்டு, அவற்றை மலரவிப்பதற்காக  அறிவு, ஆற்றல், அனுபவம் என்பவற்றைப்  பகிர்ந்து செயற்பட்ட பல சமூகச் சிற்பிகள் இன்று நம்மிடையே இல்லை.நாட்டிலும், சமுதாயங்களிடையேயும் நல்ல மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதற்காக தங்களையே அர்ப்பணம் செய்து வாழ்ந்த பல சமூகத் தலைவர்கள்; இத்தேசத்தைவிட்டு மறைந்து விட்டார்கள். 

முஸ்லிம் தேசியமும் மாற்றமும்

ஒரு சமூகத்தின்  சமூகக் கட்டமைப்புக்களின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துச் செயற்பட்ட துறைசார் நிபுணர்களும், தலைவர்களும் வாழ்ந்து மறைந்தாலும் அவர்கள் காலங்களினால் நினைவூட்டப்படுகின்றனர். 

ஒரு சமூகத்தின் தலைவிதியை நிர்ணைக்கும் சமூகக் கட்டமைப்புக் கூறாக அரசியல் துறை உள்ளது. இத்துறையில் கால்பதித்து ஆளுமையுள்ள தலைமைத்துப் பண்புகளினால் மக்களை ஒன்றிணைத்து செயற்பட்ட அரசியல் தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் சமூகத்தினால் அதிகம் பேசப்படுபவராக மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவும், மலையக மக்கள் விரும்பும் தலைவராக இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானும், முஸ்லிம் சமூகத்தில் அதிகம் பேசப்படுபவராக மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபும் திகழ்கின்றனர்.

எதிர்காலத்தை நிகழ் காலத்தில் எதிர்வு கூறி மக்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்து தாம் சார்ந்த இன மக்களும் ஏனைய மக்களும் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்று செயற்பட்டு, மக்களுக்காக வாழ்ந்த தந்தை செல்வா, அவர் மறைந்து தசாப்தங்கள் பல கடந்தும் இன்றும் தமிழ் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் சமூகத்தின் மத்தியில் அவரது வெற்றிடம் இன்னும் நிரப்பப்படாத வெற்றிடமாகவே உள்ளது.

அவ்வாறுதான் 1982ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஷை உருவாக்கி நீலமென்றும், பச்சையென்றும் பிரிந்து நின்ற வடக்கு, கிழக்கு முஸ்லிம்களை ஒன்றிணைத்து பெரு விருட்சமாக்கி, அதன் மூலம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் பயன்மிக்கத்தக்க பல பணிகளை 14 வருடங்களாக மேற்கொண்ட மறைந்த தலைவர்  அஷ்ரபின் குறுகிய கால அரசியல் பயணம்; சமூகத்தின் பல எதிர்காலத் தேவைகளுக்கு நிகழ்காலத்தில் தீர்வைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. அவ்வாறு பெற்றுக்கொடுத்த  அஷ்ரபின் மரணம் கிழக்கு முஸ்லிம் அரசியலில் நிரப்பப்பட முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

தூரநோக்கோடு ஒன்றை உருவாக்கி அதை அடைவதற்கான செயல் நுணுக்கத்தை விருத்தி செய்து, ஏனையவர்களின் ஆதரவைத் திரட்டி, தூரநோக்கை அடைந்து கொள்வதற்கான செயற்பாட்டை ஊக்கப்படுத்தி. அதன் மூலம் இலக்கை அடைந்துகொள்ளக் கூடிய தலைமைத்துவப் பண்பு ஒரு தலைமைக்கு அவசியமாகும். 

ஒரு செயல் திறன் மிக்க தலைவர் எதிர்காலம் பற்றிய தூர இலக்கை உருவாக்குவார். அத்தூர இலக்கை நோக்கி இயங்குவதற்கான அறிவுபூர்வமான செயல் உபாயங்களை விருத்தி செய்வார். அவ்வாறு இயங்குவதற்கு அவசியமாகின்ற ஆதரவையும் இணக்கத்தையும் குழு முயற்சியை வழங்கக் கூடிய மிக முக்கியமான அங்கத்தினர்களின் ஒத்துழைப்பையும் திரட்டுவார். அவற்றுடன் செயல் உபாயங்களை அமுல்படுத்தும் விடயத்தில் பங்குகொண்டு தொழிற்படக் கூடிய நபர்களை நல்ல முறையில் ஊக்கப்படுத்துவார். இவ்வாறன தலைமைத்துவத்துக்கான தேடலானது முஸ்லிம் தேசியத்தில் அவசிமாகவுள்ளது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ள வேண்டிய விடயங்களை நிர்ணைத்து, ஒழுங்குபடுத்தி, அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றத் தேவையான திட்டங்களை வகுத்து, அத்திட்டங்களைச் செயலுருப்படுத்தி தம்மோடு இணைந்திருக்கும் பலரையும் ஆர்வத்தோடு பங்குகொள்ளச் செய்வதற்கும், குறித்த திட்டங்களைச் செயற்படுத்தும்போது அல்லது மேற்கொள்ளும்போது ஏற்படக் கூடிய முரண்பாடுகள், பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெறக் கூடியவராகவும் தலைவர் அல்லது தலைமைத்துவம் இருக்க வேண்டும். இத்தகைய தலைமைத்துவத்துக்கான அடிப்படைத் தகைமையை மறைந்த தலைவர் அஷ்ரப் கொண்டிருந்தார். அதனால்தான், இன்றுவரை அவரின் தலைமைத்துவ வழிகாட்டல்களையும் அவரால் சமூகம் அடைந்த நன்மைகளையும் அபிமானிகளால் மறக்க முடியாமல் இருக்கிறது.

தலைவர்கள், உண்மைத்தன்மை, நன்பகத்தன்மை, தூரநோக்குச் சிந்தனை, தொடர்பாடல் திறன், ஏனையவர்களுடன் சுமுகமான உறவு, செல்வாக்குச் செலுத்தும் தன்மை, நெகிழ்வுத் தன்மை, தீர்மானிக்கும் ஆற்றல், திட்டமிடல். கலந்துரையாடல் போன்ற பண்புடையர்வளாக இருத்தல் அவசியம.

பிரதிநிதித்துவ அரசியல் அதிகாரத்தை வழங்கக் கூடிய மக்கள் சக்தி கொண்ட வடக்கு கிழக்கு மாகாணம் உட்பட தென்னிலங்கை வரை வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற அரசியல், சமூக ,பொருhளதார கல்வி, சுகாதார, வாழ்விடம் உள்ளிட்ட பல குறுகிகால, மற்றும் நீண்ட கால பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படாது தேங்கிக் கிடக்கின்றன. இவை தீர்க்கப்படவில்லை. அதுதவிர, அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தொடங்கிய அபிவிருத்தி நடவடிக்கைகள் முழுமை பெறவில்லை. அடிமட்ட கட்சிப் போராளிகளின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், இக்கட்சிகளையும் கட்சித் தலைமைகளையும் நம்பி இன்னும் தியாகங்களைப் புரிய முடியாது என்ற நிலைக்கு கட்சியின் அதி தீவிர விசுவாசிகள் முன்வைத்திருப்பதை அண்மையில் தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியில்; நீண்ட காலம் தேசிய அமைப்பாளராக செயற்பட்ட எம்.எஸ். உதுமாலெப்பை கட்சியிலிருந்து விலகியமை கிழக்கு அரசியலில் நோக்கப்படுவதாகக்  சுட்டிக்காட்டப்படுகிறது. 

கட்சிகளினாலும், கட்சித் தலைமைகளினாலும் ஏமாற்றப்பட்டுள்ள முஸ்லிம் தேசியத்தில் மாற்றம் ஏற்படுவது அவசியம். இந்த மாற்றத்திற்கான அவசியம் கட்சித் தலைமைகளை ஒன்றிணைத்து முஸ்லிம் தேசியத்தின் அரசியல் பலத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் அல்லது முஸ்லிம் தேசியத்தில் தலைமைத்துவம் அடையாளம் காணப்பட வேண்டும்.

சமூகங்களுக்கிடையே ஒற்றுமையும், புரிந்துணைர்வும், ஒருமைப்பாடும் ஏற்படுத்தப்பட வேண்டும். அவற்றினால் நாடும் மக்களும் சுபீட்சமும் நிம்மதியும் அடைய வேண்டும் என்ற உன்னத மனப்பாங்கு கொண்டு, அவற்றை மலரவிப்பதற்காக  அறிவு, ஆற்றல், அனுபவம் என்பவற்றைப்  பகிர்ந்து செயற்பட்ட பல சமூகச் சிற்பிகள் இன்று நம்மிடையே இல்லை. 

இருப்பினும், தலைமைத்;துவ பண்புகளும் ஆளுமையும் ஆற்றலும் கொண்டவர்கள் சமூகத்தில் இருந்தாலும் அத்தகையவர்கள் தஙகளது ஆற்றலையும் அனுபவத்தையும் சமுதாயத்தின் சமகால, எதிர்கால நலன்களுக்காக அர்ப்பணிப்பதற்கு முன்வராத சமூக நப்பிகளாக ஒதுங்கியுள்ளனர்.

இந்நிலையில் முஸ்லிம் தேசியத்தின் எதிர்கால அரசியல் பயணம் சக்திமிக்கதாக முன்நகர்த்;திச் செல்லப்ப பட வேண்டுமாயின் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளின் குரல்கள் முஸ்லிம்களின பிரச்சினைகளை தீர்த்து வைக்க பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் ஒன்றாக ஒலிக்க வேண்டும். 


சலுகைகளுக்காகவும், சுயநல நிகழ்ச்சி நிரல்களுக்காகவும், முஸ்லிம் தேசியம் நெடும் காலமாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த ஏமாற்றங்களுக்கு மக்களும் பழக்கப்பட்;டுவிட்டார்கள். இந்நிலைமைகள் தொடருமாயின் முஸ்லிம்களை நோக்கி வரும் நெருக்கடிகளும், பிரச்சினைகளும் அதிகரிக்கவே செய்யும். இந்நிலைமை எதிர்கால முஸ்லிம் தேசியத்தை ஆரோக்கியமற்றதாக்கிவிடும்.

ஏதிர்காலத் தேர்தல்களில் முஸ்லிம்களின் பிரநித்தித்துவம் அதிகரிக்கப்பட்டு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண முஸ்லிம் தலைமைகள் ஓரணியில் செயற்படுவது சமூகத்தின் எதிர் காலத் தேவைகளில் அதி முக்கியமாகக் கருதப்படுகிறது. அரசியல் அதிகாரம் முஸ்லிம் தேசியத்தின் நன்மைக்காக பயன்படுத்தப்பட வேண்டுமாயின கட்சி அரசியலுக்கு அப்பால் ; முஸ்லிம் தேசியத்தின் வாக்குகளைப் பெற்றவர்கள் மக்களின் குரல்களுக்கு மதிப்பளித்து செயற்பட முன்வர வேண்டும். மக்களின் குரல்களையும், தேவைகளையும், பிரச்சினைகளையும் புறக்கணித், அவற்றைத் தீர்ப்பதற்கு கால தாமதத்தை ஏற்படுத்தி, தங்களது நலன்களையும், தங்களது சார்ப்பானவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கி, தங்களது இருப்புக்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ஏமாற்று அரசியலை முஸ்லிம் அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் முன்னெடுக்குமாயின் முஸ்லிம் தேசியம் மாற்றுத் தலைமைகளைத்  தேடுவதை எவ்விததத்திலும் தவிர்க்க முடியாது. 

-எம்.எம்.ஏ.ஸமட்

-

No comments:

Post a Comment