தெலம்புகல்ல முஸ்லிம் வித்தியாலயத்துக்கு புதிய கட்டிடம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 5 March 2019

தெலம்புகல்ல முஸ்லிம் வித்தியாலயத்துக்கு புதிய கட்டிடம்!



இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவற்காக வர்த்தகமானி அறிவித்தல் இன்று அல்லது நாளை வெளியிடப்படலாம்.  இதில் கணிசமானளவு மௌலவி ஆசிரியர்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளார்கள். இந்த  மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வெகுவிரைவில் வழங்கவுள்ளோம் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். 

இப்பாகமுவ தெலம்புகல்ல முஸ்லிம் வித்தியாலயத்தில்  ஒரு கோடி ருபா செலவில்  நவீனமுறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள  ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கட்டிடத் தொகுதி திறப்பு விழா அதிபர் எம். எஸ். எம். பௌமி தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கட்டிடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாகைளுக்கு எவ்வகையிலான பாகுபாடுகளின்றிமின்றி மிகவும் கவர்ச்சிகரமான கட்டிடங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் தேவையான ஆசிரியர் வளங்கள் அதிபர் உள்ளிட்ட   அனைத்து கட்டிட வசதிகளும் கணிசமானளவு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில் பல பாடசாலைகள் திறந்து வைத்தோம். ஹிரியால தேர்தல் தொகுதியில் ஆறு மட்டில் திறந்துள்ளோம். இப்படி ஒரு நாளும் பாடசாலைக் கட்டிடங்கள் திறந்து வைக்கும் வைபவங்கள் ஒருநாளும் இடம்பெற்று இருக்க முடியாது. நேற்று முன்தினம் 200 பாடசாலைகள ஒரே நாளில் திறந்து வைக்கப்பட்டது. இது  குளியப்பிட்டிய தேர்தல் தொகுதியில் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. பண்டுவஸ்நுவர பகுதியில் இரண்டு முஸ்லிம் பாடசாலையில் சியப்பலாகஸ்கொட்டுவ, கொகுணுகொல்ல ஹிரியால தேர்தல் தொகுதியில் முஸ்லிம் பாடசாலைகளிலும் கட்டிடங்கள் திறந்து வைத்துள்ளோம். இப்படிப் பார்க்கப் போனால் முஸ்லிம் பாடசாலைகளை கூடுதலாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்.



தற்போது திறந்து வைத்துள்ள கட்டிடத்தின் அழகிய தோற்றத்தைப் பாருங்கள். அது அழகான ஹோட்டல் போன்று காட்சியளிக்கின்றது அல்லவா? கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடங்களை விட ஒரு புதிய மாற்றுடத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் இந்த அழகிய தோற்றமுடைய 1500 க்கும் மேல்பட்ட கட்டிடமங்கள் திறந்து வைக்கப்படவுள்ளது. எல்லா வசதிகளையும் கொண்ட வகுப்பறைக் கட்டிடங்களாகும். தனித்தனியாக என 40, 000 மலசல கூடம் நிர்மாணித்துள்ளோம். அது மட்டுமல்ல நடமாடும் நூலகம் 3000 வழங்கியிருக்கின்றோம். எந்த அரசியல் தலையீடுகளுமின்றி 4000 அதிபமார்கள் நியமனம செய்துள்ளோம். இன்னும் இருவாரங்களுக்கு முன்னர் 1900 அதிபர்களைப் பெற்றுக் கொள்வதற்காக பரீட்சைகள் நடத்தியிருக்கின்றோம். கல்வி நிர்வாக சேவையாளர்களன் என 2000 பேர்களை இணைத்துக் கொண்டுள்ளோம். விளையாட்டுப் பயிற்சியாளர் என 3850 பேர்களை இன்று நாளை இணைத்துக் கொள்ளவுள்ளோம். எதிhகாலத்தில் இந்த கல்வித் துறையில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமற் சகல வசகதிகளையும் பூரணமாக நிறைவேற்றி வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  தொடங்கஸ்லந்த ஐ. தே. கட்சி அமைப்பாளர்  எம். எஸ். பெரேரா, இப்பாகமுவ கல்வி வலயப் பணிப்பாளர் காமினி பண்டார, தொழிலதிபர்  எம். எஸ். எம். ரனீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி

No comments:

Post a Comment