கொழும்பில் கட்டார் தேசிய விளையாட்டு தின நிகழ்வுகள் - sonakar.com

Post Top Ad

Wednesday 13 February 2019

கொழும்பில் கட்டார் தேசிய விளையாட்டு தின நிகழ்வுகள்


கட்டார் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் நேற்று கொழும்பு ரோயல் கல்லூரியின் விளையாட்டு கட்டிட தொகுதியில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கைக்கான கட்டார் தூதுவர் கலாநிதி ராஷித் ஷபீஃ அல் மர்ரி தலைமைல் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், பல நட்பு நாடுகளின் தூதர்கள், இராஜதந்திரிகள், கட்டார் தூதரக உறுப்பினர்கள் மற்றும் கட்டார் சாரிட்டி அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பங்கு பற்றினர்.


அண்மையில் ஐக்கிய அறபு அமீரகத்தில் இடம் பெற்ற ஆசிய கிண்ண உதைபந்தாட்ட தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் மகுடத்தை சுவீகரித்துக் கொண்ட கட்டார் தேசிய அணியின் வரலாற்று வெற்றியும் இதன் போது நினைவு கூறப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

காட்டாரின் தேசிய விளையாட்டு தினம் அந்நாட்டு மன்னர் தமீம் பின் ஹமத் ஆல் தானியினால் 2011 ம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப் படுத்தப் பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் வரும் செவ்வாய் கிழமைகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

தினசரி வாழ்க்கையில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம், அதன் மூலம் பெறப்படும் நன்மைகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை ஊக்குவிக்கும் நோக்கில் பிரகடனப் படுத்தப் பட்டுள்ள இத்தினம், நாட்டு மக்கள் மற்றும் அங்கு கடமை புரியும் வெளிநாட்டவர்கள் அனைவருக்குமான பொது விடுமுறை தினமாகவும் அறிவிக்கப் பட்டுள்ளதோடு, அத்தினத்தில் அனைவரும் தாம் விரும்பிய விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டுள்ளமை சுட்டிக் காட்டத் தக்கது.

-அபூ அய்மன்

No comments:

Post a Comment