அமைச்சரவையிலும் 'போதைப் பொருள்' பாவனையாளர்கள்: ரஞ்சன் - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 February 2019

அமைச்சரவையிலும் 'போதைப் பொருள்' பாவனையாளர்கள்: ரஞ்சன்


அமைச்சரவையிலும் போதைப்பொருள் உட்கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் ரஞ்சன் ராமநாயக்க.


நேற்றைய தினம் கண்டி-குருநாகல் நெடுஞ்சாலைப் பணிகளைப் பார்வையிடச் சென்றிருந்த நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ள அவர் சில போதைப் பொருள் வர்த்தகர்கள் தமக்கெதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

போதைப் பொருள் விற்பனையில் பெயர் போன சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி அவ்வப்போது பேசி வந்த ரஞ்சன், தற்சமயம் மாகந்துரே மதுஷ் கைது செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதியும் டி.ஐ.ஜி லத்தீபும் பாராட்டப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment