ஒரு லட்சம் லஞ்சம்: காலி அனுலாதேவி அதிபர் கைது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 February 2019

ஒரு லட்சம் லஞ்சம்: காலி அனுலாதேவி அதிபர் கைது!


முதலாம் தர அனுமதிக்கு ஒரு லட்ச ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காலி அனுலாதேவி பெண்கள் பாடசாலை அதிபர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பாடசாலை அனுமதியை திட்டமிட்டு தாமதப்படுத்திய அதிபர், பெற்றோரிடம் லஞ்சம் கோரியுள்ளார். இந்நிலையில், இது குறித்து பெற்றோர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்ததுடன் அவர்களின் அறிவுரைக்கமைய அதிபரின் அறையில் வைத்தே லஞ்சத்தைக் கொடுத்து அதிபரைக் கையும் களவுமாக பிடிக்க உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலையில் இணைப்பதற்கான அனைத்து தகுதிகளும் இருந்தும் லஞ்சம் பெறுவதற்காகவே அனுமதி தாமதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment