விமல் தரும் பணத்தை மக்களுக்காக செலவு செய்வோம்: JVP - sonakar.com

Post Top Ad

Saturday, 12 January 2019

விமல் தரும் பணத்தை மக்களுக்காக செலவு செய்வோம்: JVP


ஜே.வி.பி செயலாளர் டில்வின் சில்வாவின் கருத்துக்களைத் திருடி புத்தகம் வெளியிட்டதன் பின்னணியில் விமல் வீரவன்சவுக்கு 10 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் புத்தக உரிமையும் டில்வினுக்கே என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்நிலையில், அவர் தரும் பணத்தை முழுமையாக மக்கள் நலன் நடவடிக்கைகளுக்கே செலவு செய்யப் போவதாக டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி உறுப்பினராக இருந்த காலத்தில் நிறைவேற்றுக் குழுவில் டில்வினால் முன்மொழியப்பட்ட கருத்துக்களை தனது கருத்தென சித்தரித்து விமல் வீரவன்ச புத்தகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment