டீல் இல்லாமல் BREXIT இல்லை: நாடாளுமன்ற முடிவால் திணறும் UK பிரதமர் - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 January 2019

டீல் இல்லாமல் BREXIT இல்லை: நாடாளுமன்ற முடிவால் திணறும் UK பிரதமர்ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஐக்கிய இராச்சிய மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு மூலம் தீர்மானித்திருந்த போதிலும், ஒன்றியத்துடன் 'உடன்பாடுகள்' எட்டப்படாது ஐக்கிய இராச்சியம் வெளியேற முடியாது என தடை ஏற்பட்டுள்ளது.


மக்கள் அபிப்பிராயத்தை மதித்து ஐக்கிய இராச்சியம் வெளியேறியே ஆக வேண்டும் என தற்போதைய பிரதமர் தெரேசா மே நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை, உடன்பாடுகள் எட்டப்படாவிடினும் கூட வெளியேறுவதற்குத் தீர்மானித்திருந்தனர்.

நோ-டீல் என அறியப்பட்ட குறித்த விவகாரம் தொடர்பில் இன்று மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாடுகளை எட்ட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தெரேசா மே தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment