கண்டி: முஸ்லிம் சமூக அமைப்புகளின் வெள்ள நிவாரண உதவி - sonakar.com

Post Top Ad

Tuesday 8 January 2019

கண்டி: முஸ்லிம் சமூக அமைப்புகளின் வெள்ள நிவாரண உதவி


கண்டி நகர் பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கட்டுகலை இளைஞர் அமைப்பு . ஜம்மிய்யதுல் உலமா, கண்டி நிவாரண அமைப்பு, கட்டுக்கலை ஜும்ஆ பள்ளிவாசல் ஆகிய இணைந்து கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி கண்டியில் பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட கண்டி நகரிலுள்ள மக்களுக்கு உலருணவுப் பொருட்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் என நிவாரணப் பொருட்கள் வழங்கி  வைக்கும் வைபவம் கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசல் கேட்போர் கூடத்தில் கண்டி நகர் பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் தலைவர் கே எம். எச். ஏ சித்தீக் தலைமையில் இடம்பெற்றது. 


இந்த வெள்ளத்தின் போது சுதுஹும்பொல, தெய்யன்னவெல, அக்பர் டவுன், திவங்க போதி மாவத்த, போகடவத்த ஆகிய பகுதிகளில் வாழும்  சிங்கள தமிழ் முஸ்லிம்  ஆகிய மக்கள் கணிசமானளவு பாதிக்கப்பட்டனர்.

இந்தப்பிரதேச மக்களுக்கு இந்த அமைப்புக்களின் மூலம் ஆரம்ப கட்டமாக சமைத்த உணவுப் பொருட்கள் வழங்கி வைத்ததுடன் இன்று வரை கற்றல் உபகரணங்கள், உலருணப் பொதிகள் என்பன வழங்கி வருகின்றார்கள். மேலும் வீடுகளில் பாதிக்கப்பட்ட சலவை இயந்திரங்கள், குளீருட்டி. மின்சார உபகரணங்களையும் திருத்தி வழங்கி மேலும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்நிகழ்வில் கலந்து கொண்ட கண்டி மாநகர சபை உறுப்பினர் அஸ்மி மரைக்கார், சம்மேளனத்தின்  செயலாளர் என். எம். எம். மன்சூர்  ஷிப்ரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி



No comments:

Post a Comment