ரணிலின் அமைச்சு 'பெயர்' மாறும் - திட்டம் பலிக்கும்: சுமந்திரன்! - sonakar.com

Post Top Ad

Wednesday 16 January 2019

ரணிலின் அமைச்சு 'பெயர்' மாறும் - திட்டம் பலிக்கும்: சுமந்திரன்!


ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தமை தொடர்பில் முன் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள சுமந்திரன், தமது கட்சி ஒன்றும் 'சும்மா' ஆதரவளிக்கவில்லையெனவும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.



இப்பின்னணியிலேயே ரணில் விக்கிரமசிங்க வடக்கு அபிவிருத்திக்கான அமைச்சைத் தன் வசம் வைத்துக் கொண்டதாகவும் அது விரைவில் வட-கிழக்கு அபிவிருத்தி அமைச்சாகப் பெயர் மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதவிகள் எதையும் பெறவில்லையாயினும் வடக்கு அபிவிருத்தி தொடர்பில் பிரதமர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசித்தே முடிவுகளை மேற்கொள்வார் எனவும் இதற்கென கூட்டமைப்பில் 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிகளும் பதவிகளை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வரும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாம் சார்ந்த பிரதேச அபிவிருத்திகளை வழி நடாத்தும் சக்தியாக தம்மை உருவாக்கிக் கொண்டுள்ளமையும் வட - கிழக்கு இணைப்பில் கூட்டமைப்பு மும்முரமாக இருக்கின்ற சூழ்நிலையில் இரு மாகாணங்களுக்கும் ஒரே அமைச்சு எனும் பேச்சு எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment