அமைச்சர்களுக்கு இனி இரண்டு வாகனங்களுக்கே அனுமதி! - sonakar.com

Post Top Ad

Tuesday, 2 October 2018

அமைச்சர்களுக்கு இனி இரண்டு வாகனங்களுக்கே அனுமதி!


அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ வாகனங்களின் எண்ணிக்கை இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மேலதிக வாகனங்களை தமது உறவினர்களுக்கும் வழங்கி அதன் செலவுகளையும் அரசின் மீது சுமத்தும் நிலையே தொடர்வதால் அதற்குத் தீர்வு காணும் முகமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சுக்களில் இரண்டுக்கு மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டால் அதற்கு அமைச்சின் செயலாளர் அல்லது கணக்காளரே பொறுப்பேற்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment