காவியுடையணிந்து கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 September 2018

காவியுடையணிந்து கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது!


பௌத்த பிக்குகள் போன்று காவியுடையணிந்து தியானம் செய்வதாகக் கூறி காட்டுப் பகுதியொன்றில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.பதுராலிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர் இன்று மத்துகம நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தருணத்தில் சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment