கொழும்பு சாஹிராவின் ஸ்தாபகர் தின நிகழ்வு - sonakar.com

Post Top Ad

Thursday, 20 September 2018

கொழும்பு சாஹிராவின் ஸ்தாபகர் தின நிகழ்வு

கொழும்பு மருதானை சாஹிராக் கல்லூரியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நாளை (21) வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு கல்லூரியின் என்.டி.எச். அப்துல் கபூர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரிக்கார் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில்,  பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் ஏ.ஜி. ஹுஸைன் இஸ்மாயில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொள்கிறார்.

பாடசாலைகளில் நவீன கல்விக்கான சவால்கள்’ எனும் தலைப்பில் அவர் சிறப்புரையாற்றவுள்ளார்.
இந்நிகழ்வில்கல்லூரி அதிபர் றிஸ்வி மரிக்கார்கல்லூரியின் ஆளுனர் சபையின் தலைவர் பௌசுல் ஹமீத்செயலாளர் அலவி முஸ்தாக்அரசியல் பிரமுகர்கள்,  உலமாக்கள்ஆசிரியர்கள்கல்லூரி பழைய மற்றும் புதிய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொள்வர்.
ஸ்தாபகர் தினப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இதன்போது இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-எம்.எஸ்.எம்.ஸாகிர்

No comments:

Post a Comment