என்னைப் பலியாடாக்கி விட்டார்கள்: மத்தியுஸ் விசனம்! - sonakar.com

Post Top Ad

Monday, 24 September 2018

என்னைப் பலியாடாக்கி விட்டார்கள்: மத்தியுஸ் விசனம்!


இலக்கை கிரிக்கட் நிர்வாகம் தன்னைப் பலியாடாக்கி விட்டதாக விசனம் வெளியிட்டுள்ளார் நிர்ப்பந்தத்தின் பேரில் இராஜினாமா செய்த முன்னாள் இலங்கை கிரிக்கட் அணி தலைவர் அன்ஜலோ மத்தியுஸ்.ஆசியா கிண்ண படுதோல்வியையடுத்து கிரிக்கட் நிர்வாகத்தின் நிர்ப்பந்தத்தின் பேரில் நேற்றிரவு ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்ததாக தெரிவிக்கும் மத்தியுஸ் தன்னைத் தனிமைப் படுத்தி தன் மீதே பொறுப்பைச் சுமத்தியமை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை தெரிவாளர்கள் விரும்பிலான் ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளிலிருந்தும் விலகத் தயார் எனவும் மத்தியுஸ் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment