மட்டக்களப்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரும் நசீர்! - sonakar.com

Post Top Ad

Tuesday 28 August 2018

மட்டக்களப்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரும் நசீர்!


கிழக்கு மாகாணத்தைத் தழுவியதாக, இந்தியத் துணை உயர்ஸ்தானிகரகமொன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் அமைக்கப்பட வேண்டுமென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில், மக்கள் தமது விசா மற்றும் ஏனைய தேவைகளுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தை நாடவேண்டுமானால், இலங்கையின் தலைநகர் கொழும்புக்குச் செல்ல வேண்டியுள்ளது என, நஸீர் அஹமட் குறிப்பிட்டார்.

கிழக்கிலுள்ள இந்துக்கள், பெரும்பாலும் தமது ஆன்மீகக் கடமைகளுக்கு இந்தியாவுக்குச் செல்கின்றனர் என்று தெரிவித்த அவர், அதற்கான விசாக்களைப் பெறுவதற்காகக் கொழும்புக்குச் செல்ல வேண்டியுள்ளதால், பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனவும், அது தொடர்பில், மக்கள் பல தடவைகள் தன்னிடம் எடுத்துக் கூறியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் மலையகத்தின் கண்டியிலும் வடக்கின் யாழ்ப்பாணத்திலும், இந்திய துணைத் உயர்ஸ்தானிகரகங்கள் அமைக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டிய அவர், அவற்றைப் போன்று, கிழக்கு மாகாணத்தைத் தழுவியதாக, மட்டக்களப்பிலும் துணை உயர்ஸ்தானிகரகமொன்று அமையப்பெற வேண்டுமெனக் கோரினார்.

-எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

No comments:

Post a Comment