எங்களையும் கலந்தாலோசிக்க வேண்டும்: முஸ்லிம் பெண்கள் அமைப்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 23 July 2018

எங்களையும் கலந்தாலோசிக்க வேண்டும்: முஸ்லிம் பெண்கள் அமைப்பு!


முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்ட விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் கலந்துரையாடவுள்ள நிலையில் அதில் குறித்த விவகாரம் தொடர்பாக அக்கறையுடன் செயற்பட்டு வரும் முஸ்லிம் பெண்கள் அமைப்பினரையும் இணைத்து கலந்தாலோசிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று வெள்ளவத்தையில் அவ்வமைப்பினர் நடாத்திய ஊடக சந்திப்பில் வைத்தே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


தற்போதிருக்கும் சட்டத்தினால் பெருமளவு பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றமையை சுட்டிக்காட்டி நீண்ட நாட்கள் போராட்டங்களை நடாத்தி வரும் நிலையில் தொடர்ந்தம் ஆணாதிக்கம் பேணப்படுவதாகவும் நீதியமைச்சர் பெண்ணாக இருந்தும் கூட பெண்கள் அமைப்பிடம் கலந்தாலோசிக்கப்படவில்லையெனவும் இங்கு தெரிவிக்கப்பட்டதுடன் மலேசியா போன்ற நாடுகளில் பெண் காதி நீதிபதிகள் காணப்படுகின்ற போதிலும் இலங்கையில் தொடர்ந்தும் பாரபட்சம் நிலவுகதாகவும் தெரிவிக்கப்பட்டது..

இவ் ஊடக சந்திப்பில் சட்டத்தரணிகள் சபானா குரைஸ் பேகம், கசானா சேகு இஸ்ஸதீன்,பிஸ்லியா பூட்டோ மற்றும் புத்தளம் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி  நம்பிக்கையக பிரதிநிதி ஜூவைரியா,  மன்னார் மத்திய அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதி என். றஸ்மியா ஆகியோரும் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

-அஷ்ரப் ஏ சமத்

1 comment: