மஹிந்த தான் தகுதியான வேட்பாளர்: வெல்கம! - sonakar.com

Post Top Ad

Saturday, 21 July 2018

மஹிந்த தான் தகுதியான வேட்பாளர்: வெல்கம!


கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் எனும் வாத விவாதங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் அதற்கு தகுதியான ஒரே நபர் மஹிந்த ராஜபக்சவே என தெரிவித்துள்ளார் குமார வெல்கம.


இதற்கேற்ப அரசியல் சட்டத்தில் மீளவும் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான முன்னெடுப்புகள் பற்றி தமது தரப்பு ஆலோசித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

மஹிந்த ராஜபக்ச வாழ்நாள் ஜனாதிபதியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட 18ம் திருத்தச் சட்டத்தை ஆதிரித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் அமைச்சர்கள், கட்சிகள் ஆட்சி மாற்றத்தின் பின் தாம் தவறிழைத்து விட்டதாக தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment